பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

பழகும் விளையாட்டு வாழ்க்கையில், பயன் தரத்தக்க குணநலன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் .அதுவே அறிவுடிைமை. அதையேஆன்ற சான்றாண்மை என்றும் கூறலாம்.

சான்றாண்மை என்னும் பெருந்தன்மையைத் தான், நான் போராண்மை என்று பாடினேன், என்று வள்ளுவர் பேசிக் கொண்டிே வந்தார்.

நமது வீரர்களும் வீராங்கனைகளும் விளை யாட்டுப் போட்டிகளின் போது நடிந்து கொண்டி முறைகளைப் பார்த்ததால் ஏற்பட்ட வேதனையில் தான், மேற்கண்டவாறு தனது பேச்சை ஆரம்பித்தார்.

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு (962) பேராண்மை வேண்டு பவர்

பிறர் வெறுக்கத் தகுந்த இழிவான செயல் களைச் செய்யாதவர்களை தான் பேராண்மை மிக்க வர்கள் என்று குறித்திருக்கிறேன் பாருங்கள்.

கோபப்படுகிறவன் குணமிழந்து போய் விடு கிறான். குறுக்கு வழிகளைப் பின்பற்ற முனை கிறான். பிறருக்குப் பெருந்தீங்கு செய்தாவது, தான் விரும்புகிற வெற்றியை அடையவேண்டும் என்று விரும்புகிறான்.

பெருந்தீங்கு செய்கிற பேய்க்குணம் முளைத்து விட்டால், பெருந்தன்மை எப்படி நிலைக்கும் ? பேராண்மை எப்படி வளரும்.