பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 283

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின் (965)

குடிபிறப்பால், செல்வ வளத்தால், குன்று போல் உயர்ந்த இடத்திலிருந்து வந்தவர்கள் கூட, ஒரு குன்றிமணி அளவு தரம் தாழ்ந்து செயல் பட்டாலும் கூடி, அவர் குன்றிப்போய் விடுவார்கள். தாழ்ந்து போய் விடுவார்கள்.

அதனாலே, பிறர்க்குக்கேடு செய்யாமல் இருப் பதை பெருந்தன்மை என்றேன். பேராண்மை என்றேன் என்றார்.

ஒருவன் ஏன் வாழ்க்கையில் தவறு செய் கிறான் ? விளையாட்டில் ஏன் தவறும் கேடும் செய்கிறான் என்றால், அவன் திறமை இல்லாத வறியவனாக இருப்பதால்தான்.

செல்வ வசதி இல்லாதவனும், விளையாட்டுத் திறமை இல்லாதவனும் ஒன்றுதான். இல்லாதவன் தன்னை, வல்லமையுடையவனாக வெளிக்காட்டி, பெருமைபெற, தீயவைகளை தூய வழி, தெரிந்த வழி என்று துணிகிறான்.

அவ்வாறு திறமையற்றவன் தீச்செயல் செய்கிற போது, அவன் மீண்டும் மீண்டும் திறமை யற்றுத் தேய்ந்து போகிறானே ஒழிய, தெளிந்த வனாக, எல்லாம் நிறைந்தவனாக முன்னேறி வர முடிவதில்லை.