பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வாழ்க வளமுடன்

எனது நிலையை உங்களுக்கும் கூறிவிடுகிறேன். விளையாட்டுத் துறையை என் வாழ்வுத் துறை யாக, வழிநடிைப் பயணத் துறையாக மேற் கொண்டு விட்டேன். உ ண் ணு ம் போதும் உறங்கும் போதும், எண்ணும் போதும், எழுதும் போதும், விளையாட்டுக்களின் அருமை பெருமை பற்றியே போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறேன். அதிலே ஏதாவது அலங்கோலங்கள் நடைபெறு கிறதைப் பார்க்கிற போது, என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. பொறுத்துக் கொள்கிற சக்தியும் இல்லை என்றேன் நான்.

நீங்கள் தவறுகளை சுட்டிக் காட்டி எழுத வேண்டியது தானே ? தவறு செய்பவர்களைத் திருத்த முயல்வது தானே ? உங்களுக்குத் தான் அந்த வாய்ப்புக்களும் வசதிகளும் நிறைய இருக் கின்றனவே என்றார் வள்ளுவர்.

இருப்பதை அறிகிறேன். இருந்தாலும் உங்கள் பாதையைத்தான் நான், சரியான பாதையாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்றேன்.