பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 29.3

மொழிகளில், வாழும் இடங்களில், செயல் முறை களில், மாறி வாறி வந்தாலும், மனோபாவத்தில் மாறுவதேயில்லை.

மனிதர் என்றால் தவறு செய்பவர் தான் என்ற ஒர் மேனாட்டுப் பழமொழியே இருக்கிறது. (Man is err) : அந்தக் கருத்து மக்கள் மனங்களிலே நின்று நிலைத்துப் போயிருக்கிறது என்றேன்.

மனிதர்களின் வாழ்கை எப்படியெல்லாம் மாறி மாறி வருகிறது பாருங்கள்.

மாக்கள், மக்கள், அமரர், தேவர் என்பதாக வருகிறது என்றார். புரியவில்லை என்றேன்.

அஃறினை எனப்படுகிற விலங்கு வாழ்க்கையை மாக்கள் என்றும்; ஆறாவது அறிவினைப் பெற்ற உயிரினத்தை மக்கள் என்றும்; பெருமைக்குரிய பண் பார்ந்த செயல்களைச் செய்து, புகழ்பெற்று, மக்கள் மனங்களிலே நிலையாக அமர்ந்து விட்டவர்களை அமரர் என்றும் : தெய்வத்திற்குரிய வழிபாட்டுப் பெருமையை, உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிற போதே பெறும் அமரர்களை தேவர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் நயம்படப் பேசும்.

விளையாட்டுத் துறையில் இந்த மேன்மை களை எளிதாக அடைய முடியும் என்று நான் நம்புகிறேன் என்றேன்.