பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

அதற்காக இல்லை. கோயிலுக்குள்ளே சென்று. குற்றம் செய்பவர்களை, இறைவன் பார்த்துக் கொள்வான். அதுபோலவே, விளையாட்டிற்குள்ளே வந்து விதண்டாவாதங்கள் செய்கின்றவர்களை காலம் பார்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் நான், எவரது தவறுகளையும் சுட்டிக் காட்டி எழுதுவதில்லை.

நல்லதே நினைப்போம் ! நல்லதே நடிக்கும். என்ற நம்பிக்கை தான், உங்கள் முறையை நினைக்கத் துாண்டியது. உங்கள் வழிகளைப் பின் பற்றத் தூண்டியது.

உலகுக்கெல்லாம் வேதமாக நீங்கள் வழங்கிய சிந்தனைகளை. விளையாட்டுச் சிந்தனைகளாக எனது மனம் ஏற்றுக் கொண்டது, எங்கள் விளை யாட்டு துறைக்கு வழிகாட்டும் சிந்தனைகளாகவே இடம் பெற்றுக் கொண்டது. நாங்கள் செய்த பெரும்பாக்கியம், உங்கள் குறள்கள் எங்கள் துறைக்குக் கிடைத்தது. இனியும் தொடர்ந்து குறள்களைப் பின்பற்றி பெருமைகள் பெறுவோம் என்றேன்.

என் காலத்திற்கேற்ப எழுதிய குறள்கள். இந்தக் காலத்துக்கும் பொருந்தி வருவது வியப்பாக இருக்கிறதல்லவா ! -

ஆமாம் ஐயா! மனிதர்கள் எந்தக் காலத்திலும் மாறுவதேயில்லை. உடிையில், உணவு வகைகளில்,