பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 3

காகப் பெருமையுடன் காத்திருந்தனர். புகழுடம்பு தான் அவர்கள் பொன்னான நோக்கமாக. இருந்தது.

நீங்கள் படித்திருக்கலாமே! அரசர், அமைச்சர், சேனைத் தலைவர், தூதுவர் என்றெல்லாம் பல அதிகாரங்களாக, நான் பாடியவை யாவும், போர் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டுதான்.

வாழ்க்கை வளமாக இருந்தது. மக்களிடம் வளமான உடல் அமைந்திருந்தது. தினவெடுத்தத் தோள்கள் தாய் நாட்டு மேன்மைக்காக, தீரச் செயல்கள் ஆற்றும் வகையில் திளைத்துக் கிடந்தன. உள்ளமும் புகழுக்காக உயர்ந்து செழித் திருந்தது. -

இப்பொழுது கூறுங்கள் நான் விளை யாட்டைப் பற்றி ஏன் பாடவில்லையென்று புரிந்திருக்குமே என்றார். ஆமாம் ன்றேன்.

முதலில் நான் மக்களையே மிகுதியாக நினைத்துப் பார்த்தேன். எந்தப் பொருளைப்பற்றி நான் பாடினாலும், மற்றவர்களுக்கு எளிதாகப் புரியும் வண்ணம், அமைய வேண்டும் என்பதில் நான் அதிகக் கவனம் செலுத்தினேன்.

அதாவது ஒரு கருத்து பற்றிக் கூறும்போது, அதன் இயல்பு, அதைப்பற்றிய விளக்கம், அதன்