பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 34 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

முதன்மை, அதன் முறைமை, அதன் ஆற்றல், செயல், வகை, நயம் பயன் அதற்குமேல் நமது கடமை என்று பத்துப் பிரிவாகப் பிரித்துக்கொண்டு கூறினேன்.

பத்து நிலை என்ற எனது பற்று நிலை தான், மக்களைப் பற்றி அதிகம் சிந்திக்கத் துண்டியது.

மக்களையெல்லாம் சான்றோர்கள் ஆக்க வேண்டும் என்ற மேலான நோக்கத்திற்காகவே குறளை நான் எழுதினேன். எக்காலத்திலும் தேறாத மக்கள் பலர் இருந்தனர். அதனால் நான் இப்படிப் பாடினேன்.

மக்களே போலவர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் (1071)

உடல் வடிவத்தால் மக்களைப் போலவே காட்சியளிப்பார்கள் கயவர்கள். மனிதர்களைப் போலவே காட்சியளிக்கின்ற கயவர்கள் அவர் களைப்போல நான் எங்கும் கண்டதில்லை.

மக்களில் இழிந்த குணம் உடையவர்களை

கயவர்கள் என்றேன். இன்னும் சிலரை நான்

மரம் என்றே கூறினேன். அதாவது உள்ளத்திலே அளக்கம் இல்லாத மக்களை மரம் என்றேன்.

“ஒருவற்கு உள்ள வெறுக்கை அதில்லார் **** ஆதலே வேறு (600)