பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 48

மக்கள் யாவரும் முழு மனிதர்களாக, மதிக்கப் பெறும் மாண்புள்ளவர்களாக வாழ வேண்டும். என்று விரும்பினேன். ஆனால், அவர்களது வாழ்க் கைச் சூழல்கள், வாழ்க்கை முறைகளையே மாற்றி அமைத்துவிட்டிருக்கின்றன.

பெய்யும் மழைத்துளிகள் விழுகின்ற இடத் திற்கு ஏற்ப மாறிக் கொள்வது போல, பிறந்த இடத்திற்கேற்ப மனிதர்களும் மாறிக் கொண்டு விடுகிறார்கள் என்பதைத் தான், நான் பல பாடல் கள் மூலமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறேன்.

மாந்தர் எல்லோரும் பிறப்பால் ஒத்தவர்கள் தாம். அவர்களுள், மக்கள் செய்வதற்கு அரியவற் றைச் செய்து சாதிக்கும் ஆற்றல் மிக்கவர்களை பெரியர் என்றேன். எளியவற்றைக் கூட செய்கிற திறன் இல்லாமல், அரியவற்றைக் செய்ய மாட்டா தவரை சிறியர் என்றேன்.

ஆகவே, பொதுவாக, ஆற்றலற்ற மக்களை சிறியர் என்றே குறித்துத் தந்திருக்கிறேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். (26)

எல்லா மக்களும் உருவத்தால் ஒன்று போல் தோன்றுவார்கள். அவர்களது செயல்பாடுகளை, செழும் பண்பாடுகளை வைத்து, நாம் பிரித்துப் பார்க்கலாம். -