பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ,

நன்மை தீமைகளைப் பற்றி நெஞ்சில் ஏந்தி, கவலை கொண்டு நன்மைகளைக் காத்து, தீமையை அணுகாது தூரமாக நிற்கிறவர்களைப் பண்பாளர் கள் என்றேன். பாவத்திற்கு அஞ்சாத பாவிகளைக் கயவர்கள் என்றேன்.

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர். (1072)

கற்றவர், கல்லாதவர் என்று மக்களைப் பகுத்துப் பார்த்தேன். அதை இந்தக் குறட்பாக் களில் கூறியிருக்கிறேன். இப்படி.

தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு ,- காமுறுவர் கற்றறிக் தார். (399)

இன்பம் தானே வாழ்க்கையின் இலக்கு. அத்தகைய இன்பம் சொற்சுவையால் ஊறும். பொருட்சுவையால் சேரும். சிறப்புத் தகுதியால் மிகுதியாகும். புகழால் பெருகும். அறம் செய்யும் போது, பொருள் ஈட்டும்போது, அதனைத் தந்து பெற்ற உலகினர் இன்பம் பெறும்போது, இன்பம் பெருகுகிறது. அத்தகைய இன்பத்தைக் கல்வி அளிக்கிறது என்பதை அறிந்து, கல்வியின்பால் காதல் கொண்டு, கற்றுத்துறை போகின்ற மாந்தரை எல்லாம் கற்றவர் என்றேன்.

கல்லாதவர்களை நான், பயனற்ற புழுதி மண் என்று வெறுத்துப் பாடினேன். அவர்கள் உலகத்தில் வாழ்கின்றனர் என்பதைத்தவிர, யாருக்கும் பயன்