பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 47

படாதவர்கள் என்ற உண்மையை உலகறியக் கூறவே, அவர்களை களர் நிலம் என்றேன்.

எப்படிப் பேணினும், களர் நிலத்தில் எதுவும் விளையாதது போல, கல்லாதவர்களால் எந்தப் பயனும் விளையாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

உளரென்று மாத்திரையரல்லாற் பயவாக் களரனையர் கல்லாதவர். (406)

அறிவு உடையவர்களை உடையார் என்றேன். அது இல்லாத மக்களை கடையர் என்றேன். -

உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லாதவர். (395)

நல்லறிவும் சொல்வன்மையும் _@LLM மாந்தரை ஒளியார் என்றேன். புல்லறிவினரை, அதாவது அறிவில்லாத மாந்தரை வெளியார் என்றேன். அவர்கள் வீட்டின் வெளிப்புறத்தே நிற்கும் வீதி மக்கள் என்ற பொருள்படக் கூறினேன்.

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுகை வண்ணங் கொளல். (714)

அறிவும் ஊக்கமும் உள்ள மக்களை உரமக்கள் என்றேன். அத்தகைய அரும்பண்பு இல்லாதவர் களை மரமக்கள் என்று இனம் காட்டினேன்.