பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

உரமொருவற்குள்ள வெறுக்கை அஃதில்லார் மரமக்கள் ஆதலே வேறு. (600)

முயற்சி இல்லாது, வாளாவிருந்து வாழ்பவர் கள் வறுமையை அடைகின்றார்கள். அப்படிப்பட்ட வர்களை வறிஞர் என்றேன், அவர்களை இரப்பர் என்றும் பாடினேன்.

சிறந்த மக்களை நான் திருவுடையார் என்று சிறப்பித்தேன். உரவோர், நோற்பார், சான்றோர், ஆழ்வார், செல்வர், என்றேல்லாம் புகழ்ந்து பாடி யிருக்கிறேன்.

இவ்வளவு பெருமையுடன் வாழ வேண்டிய மக்கள் பலர், பண்புகளுக்கு எதிர்ப்பாளர்களாக, இழி குணம் கொண்டவர்களாக, பண்பற்றவர் களாக, பாவிகளாக, பாழ்மதி உடையவர்களாக, வாழ்கின்றார்களே என்ற வருத்தம் எனக்குள்ளே ஏராளமாக இருந்தது.

அத்தகைய மக்கள், ஒழுக்கம் குன்றியவர்கள் உயர்ந்த குணநலம் குறைந்தவர்கள் என்பதால், அவர்களை நான் இழிந்த பிறப்பினர் என்றேன். அவர்கள் மனித குலத்திற்கு மாறாத எதிரிகள் என்ற பெயரில் பாடினேன். அப்படி பாடியபோது, வந்து விழுந்த சொற்களைக் கவனியுங்கள். செற்றார், (313):செருநர், (759) தெவ்வரி, (639, 671) நிரந்தவர் (821), மாற்றலர் (985), புலை வினைஞர் (329) மக்கள் பதடி (196) இவர்களை