பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 49

நான் பூரியர் (இழிந்தவர்) என்றும் சாடினேன். மனம் வாடினேன்.

மக்களை இப்படிப் பிரித்து, இனம் காட்டி யிருக்கின்றீர்கள். இருந்தாலும், மக்கள் குலம் மாற வில்லையே என்றேன். -

ஒளி என்றால் இருள் இருக்கிறது. மேடு என்றால் பள்ளம் இருக்கிறது. செல்வம் என்றால் இல்லாமை இருக்கிறது. இந்த உலகம் ஏறும் மாறும் நிறைந்தது, வீறும் கூரும் நிறைந்தது. அதனால், நாம் அதற்காக வருந்த வேண்டியதில்லை. திருந்த முயற்சிப்பது தான் தெளிந்த அறிவு. அதுவே மனிதர்களின் ஆறாவது அறிவு என்றார்.

தரம் தாழ்ந்து போகின்ற மக்களைப்பார்த்து, தாண்டிக் குதிக்கும் கோபம் தவிர்த்து, அவர்களும் நன்னெறி வரவேண்டும் என்று விரும்புகிற அவரது நல்ல நெஞ்சத்தை வியந்து பாராட்டினேன், -

நான் வாழ்ந்த காலத்தை, வேகமான காலம் என்று எண்ணியதுண்டு. இப்பொழுது உள்ள உலகமோ, இன்னும் கடுமையான வேகத்தில் அல்லவா ஒடிக் கொண்டிருக்கிறது என்று கூறிய வள்ளுவர், ஆழ்ந்த சிந்தனையுடன் வான் வெளி யைப் பார்த்தார்.

அவர் விழி போகும் நோக்கிலே, நானும்

பார்க்கத் தொடங்கினேன். என்னைப் பார்த்து சிரித்தபடி அவர், மீண்டும் பேசத் தொடங்கினார்.