பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. விளையாடலும் வினையாடலும்

செயல் என்றால் என்ன? வினை என்றால் என்ன? என்று ஒரு வினாவை என்மீது வீசி எறிந்து விட்டு, புன்சிரிப்பில் மிதந்த வள்ளுவரை, ஏக்கத் தோடு பார்த்தேன். என் இயலாமையைப் புரிந்து கொண்ட அவர், தானே பதில் தருவதற்குத் தயாரானார். -

நன்மையோ அல்லது தீமையோ விளையும்படி ஒருவர் செய்கிற காரியத்திற்கு செயல் என்று பெயர். அந்தச் செயலானது பின்னொரு காலம் வரையில் முற்றி வளர்ந்து, பயன் கொடுக்கத் தொடங்கினால், அப்போது அந்தச் செயலுக்கு வினை என்று பெயர் வந்து விடுகிறது.

அதனால் தான் நல்வினை, தீவினை, ஊழ்வினை என்றெல்லாம் பாகு படுத்திப் பேசு கின்றார்கள்.