பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளயாட்டுச் சிந்தனைகள்

வினை விதைத்தவன் வினையறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான், என்ற பழமொழி கூட இதனை ஒட்டித்தான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன் என்று நான் கூறிய கருத்தை, ஆமாம்’ என்பது போல தலையசைத்து ஆமோதித்தார்.

இந்த நேரத்தில் இன்னொரு பழமொழி ஒன்றும் எனது நினைவுக்கு வருகிறது. அதற்கும் நீங்கள் விளக்கம்தர வேண்டுகிறேன் என்றேன்.

“விளையாட்டும் வினையாகும்’ என்ற பழமொழி ஒன்று இருக்கிறது. அதை பலர் பலவாறு விரித்தும் திரித்தும் கூறுகின்றார்கள். அந்த ஒரு மொழியை வைத்துக் கொண்டு, எம் காலத்து மக்கள், விளையாட்டுக்களை வேண்டாத ஒன்றாக விலக்கி வைக்கவும் செய்கின்றார்கள், அதுபற்றி உங்கள் எண்ணத்தை வெளியிட வேண்டும். என்றேன்!

நீங்களே அந்தப் பழமொழிக்கு ஏற்பட்ட விளக்கத்தைக் கூறுங்கள். பிறகு நான் பதில் அளிக்கிறேன் என்றார்.

வினை என்ற சொல்லை எல்லோரும் இப்போது வம்பு, தொல்லை என்றே பொருள் கொண்டிருக்கின்றார்கள். விளையாட்டுக்குப் போனால் வம்பு வந்து விடும். வீண் விவகாரம்