பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வள்ளுவரின் வியப்பு

வள்ளுவரின் விழிகளில் வியப்பின் சிகரம் தெரிந்தது. வழி நெடுக, விரைவாக நடந்த மக்களைக் கண்டு, மகிழ்ந்து போனார். நெகிழ்ந்து போனார்.

கூட்டங் கூட்டமாக மக்கள் என்றார். மக்கள் தொகைப் பெருக்கம், இவ்வளவு நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றேன்.

பிறப்பிக்கும் தொழிலில் மக்கள் மிகுந்த விருப்பினராக இருக்கின்றனர். சில சிறப்பான செயல்கள் ஆற்றி, சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற சிறு ஆசை.கூட, சிந்தனைக்குள்ளே அவர்களுக்குள் எழவில்லை. உணவும், உடையும் உல்லாசமும் உள்ளதே வாழ்க்கை என்ற உணர்வு தான், இக்காலத்து நாகரிக வாழ்க்கையாக உள்ளது என்று கூறிக் கொண்டே நடந்தேன்.