பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

நாகரிகம் என்ற சொல்லை நான் பயன் படுத்தியுள்ள பாடலை உங்களுக்கு நினைவுபடுத்து கிறேன். நாகரிகம் என்ற சொல்லுக்கு கண்ணோட்டம் என்று பொருள். கண்ணோட்டம் என்பது கண் களால் கண்டு, காண்பவரிடத்து கருணையுடன் பழகுதல் என்பதாக நாம் அறிய வேண்டும்.

இப்பொழுது நாகரிகம் என்றால், புறச்செயல் களாகத்தானே படுகிறது! உணவு, _60L, உல்லாசம் என்கிறீர்கள்! வெளியுலக வாழ்க்கை யிலே மக்கள் வீழ்ந்து கிடக்கின்றார்கள் என்பது தான் எனக்குப் புலனாகின்றது என்றார்.

செயக்கண்டு நஞ்சுண்டு அமைவர் கயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் (580)

தம்மொடு பழகினவர், தமக்கு நஞ்சு கூட்டி இடக்கண்டும், கண் மறுக்க மாட்டாமையால், அதனை உண்டு பின்னும் அவரோடு மேவி அமைந் திருப்பர் என்பது இப்பாடலின் பொருளாகும்.

‘உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்’ என்று தமிழரின் உணவு உடை பற்றிய பழமொழியை நான் நினைவு கூர்ந்தேன்.

தமிழறிந்த புலவர்கள், அத்தகைய உடை கூட இல்லாமல், கையது கொண்டு மெய்யது பொத்தி, காலது கொண்டு மேலது தழுவி , குளிரில்