பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 67 . .

அதிகமாக உணவு உண்டால், உடம்பு நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை தான் அவர்களை உணவு அடிமைகளாக மாற்றியிருக்கிறது. நாவுக்கு அடிமையானவர்கள், நம்ப முடியாத துன்பங்களில் சிக்கி நைந்து போவார்கள் என்பதற்கு இந்தக் கூட்டமே சாட்சி. -

நீங்களே பாருங்கள். அவர்கள் வயிறு மட்டும் தான் விரிந்து கிடக்கிறது. குச்சி போன்ற கைகளும் கால்களும் வளைந்து நிற்க, குடை விரித்தது போல் வயிறு விரிந்து கிடக்க. குனிந்த தோள்கள். ஆனால் பளபளக்கின்ற உடைகள் என்று பேசிய வாறு பரிதாபப்பட்டார் வள்ளுவர்.

ஒரு வேளை உணவு என்றால் ஒழியாய். இரு வேளை உணவை ஏற்றுக்கொள் என்றால் ஏற்றுக் கொள்ளமறுக்கிறாய். வயிறே! உன்னோடு வாழ்தல் அரிது என்று ஒளவையார் பாடிய பாட்டை அவரிடம் கூறினேன்.

ஆமாம்! வயிற்றை வைத்துத் தானே வாழ்வின் நலமும் வளமும் தேங்கிக் கிடக்கிறது. வயிற்றை வீணடித்து விட்டால், வாழ்வின் சிறப்பும் செழிப்பும் எப்படி ஏற்படும்!

அறிவே உயர்வு, அன்பே வாழ்வு, உணவே சிறிது என்று வாழ்கிற போது தான், எல்லா இன்பங்களும் வாழ்வில் ஏற்படுகின்றன. இந்தக் குறளைக் கேளுங்கள்.