பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* G 6 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

உணவு செரிக்காமல் உண்டால், ஊறுகின்ற துன்பங்கள் ஆயிரம். அதுபோலவே, புணர்தலினும் ஊடலால் காமம் உவகை பெறுகிறது. இந்தக் காமம் உணவுக்கு உப்பாக இருக்கிறபொழுது இனிக்கிறது. உப்பே உணவாகப் போகும் பொழுது உடலையே அழிக்கிறது என்ற பொருளையும் சுட்டிக் காட்டினார். உப்பு என்றாலே இனிமை என்று ஒரு பொருள் உண்டு என்றார்.

எங்கள் காலத்தில் உணவு வகைகள் ஏராளம். அதை உண்ணுகின்ற எண்ணிக்கை அளவும் அதிகம் தான். அதனால் உடலைப் பாதிக்கின்ற நோய் களின் எண்ணிக்கையும் ஏராளம்.

எம் காலத்து மக்கள், நோய்வாய்ப் பட்டிருக் கிறேன் என்று கூறுவதை மிகுந்த நாகரிகம் என்று கருதுகின்றார்கள். நோய் வாய்ப்பட்டிருப்பதை அவமானம் என்று கருதவில்லை.

விருந்தும் மருந்தும் வாழ்வின் பயன் என்கிற இந்த மக்களை, நீங்கள் எப்படி நினைக்கின்றீர் கள் என்றேன்.

உண்மைதான். வாய் ருசியால் மக்கள் அவதிப்படுகின்றார்கள் என்பதைத் தான் இந்தத் தெருவோரத்துக் கூட்டம் தெள்ளத் தெளியக் காட்டுகிறதே என்றார் வள்ளுவர்.