பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்

ஒருவேளை உண்பவன் யோகி. இரு வேலை உண்பவன் போகி. மூன்று வேளை உண்பவன் ரோகி என்று தமிழ் நாட்டு உணவுப் பழக்கம் இருந்ததை அவருக்கு நினைவூட்டினேன்.

தவமிருக்கும் தக்கோர்கள் உணவை அறவே மறுக்கவில்லை. உடல் காக்க உயிர்க்காக்க ஒரு வேளை உண்டு வாழ்ந்தனர். இல்லறத்தில் ஈடுபட்டு நல்லறம் காக்கவும், நல்லுடல் பார்க்கவும் முயன்ற மக்கள், இரண்டு வேளை உணவை ஏற்றுக் கொண்டனர்.

வயிற்றுக்கு பாரமாகவும், பளுவாகவும் எந் நேரமும் வைத்திருந்து, வயிற்றை வீணாக்கி. அதனால் உடம்பையே நலியச் செய்து, உயிர் வாதை பெறுகிற மக்களை நோயாளிகள் என்று அந்நாளில் தரம் பிரித்து, தரமான வாழ்வு வாழ்ந்த தமிழக மக்களை, நினைத்துப் பார்த் தேன்.

தான் முன்பு உண்ட உணவு செரித்துப் போய், பசி ஏற்பட்ட பிறகு புசிக்கும் பொழுதுதான், உணவு சுவைக்கிறது. உள்ளமும் சுவையினை உணர்ந்து மகிழ்கிறது. அதுவே அழகான உணவுப் பழக்கம் என்ற வள்ளுவர், அந்த அழகான குறளை யும் பாடிக் காட்டினார்.

உணலினும் உண்டது அறல் இனிது காமம் புணர்தலினும் ஊடல் இனிது. (1326)