பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

சான்றோர்கள் கூடிய அவையிடத்தில் ஆடை குலைந்து போகிற போது, அவசரமாகச் சென்று கை உதவி, மானம் காப்பது போல என்று நான் பாடினேன்.

ஆடை குலைவது கூட அவமானம் என்ற நிலை மாறிப் போய், ஆடை கலைவதே நாகரிகம் ஆயிற்று என்று நான் இடையிட்டுக் கூறினேன். மெதுவாக சிரித்துக் கொண்டார்.

உடையில் மட்டும் மாற்றமில்லை. உணவு முறையிலும் நிறைய மாற்றம் நேர்ந்திருக்கிறது என்று கூறிக்கொண்டே வருகிறபோது, ஒரு சிறு கூட்டம் சுறுசுறுப்புடன் இயங்குவதை இருவரும் பார்த்தோம்.

தெரு ஓரத்தில் ஒரு தள்ளுவண்டி நின்றது. அதிலே உணவுப் பண்டங்களை அடுப்பில் வைத்து, தயார் செய்து கொண்டிருந்தான் ஒருவன். அந்த வண்டியைச் சுற்றித்தான் அந்தக் கூட்டம்.

கண்ட இடத்தில், கண்ட நேரத்தில், கண்டதைத் தின்னும் பழக்கம், இப்பொழுது நாகரிகமாக நிலவி வருகிறது என்றேன் நான்.

உண்மைதான். இது எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது என்று அந்தக் கூட்டத்தை வியப்போடு பார்த்தார். வேதனைக் குறிகள் அவர் முகத்தில் மெலிதாக ஒடி மறைந்தன.