பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 69

கொஞ்சமாக, அரை வயிறு சாப்பிடுங்கள். சாப்பிட்ட உணவு எளிதாக செரித்துவிடும். மீண்டும் சாப்பிடலாம். இப்படி செய்து வந்தால், நோய்கள் வந்திடும் வாய்ப்பில்லை. அதனால், நீண்ட காலம் வாழலாம். அதனால், நிறைய தரம் சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்தக் கருத்தை வைத்துத்தான், கொஞ்சம் சாப்பிடுங்கள். நிறைய சாப்பிடலாம் என்ற பழமொழியை உருவாக்கினார்கள் என்றேன்.

வயிற்றுச் சுமை தாளாத சுமை, மாளாத சுமை என்று பக்கம் பார்த்துப் பேசினார் வள்ளுவர்.

அங்கே, இரண்டு பேர், பெருத்தத் தொந்தி யுடன் போவது தெரிந்தது.

வாயை வளர்த்து, வயிற்றை வளர்த்துக் கொண்டு வேதனைப்படுகிற மக்களுக்கு , இந்தத் தொந்தி வெட்கத்தைத் தரவில்லை என்றேன். அதை பெருமையாக நினைத்துப் பாராட்டுவது

தான், எனக்கு புரியாத புதிராக இருக்கிறது என்றேன்.

மனிதர்களைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல, அதிலும் அவர்களின் மனோபாவத்தை மாற்ற முயல்வதும் எளிதான காரியமல்ல. அது