பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. புறமும் அகமும்

சிற்றுண்டியாக சுண்டல், வடை விற்றுக் கொண்டிருந்த வண்டியைச் சுற்றி நின்று, வாய்க்கு ருசி என்று, வயிறு நிரம்புவது தெரியாமல், நின்று தீர்த்துக் கொண்டிருந்த கும்பலும், அந்தத் திடீர்ச் சத்தம் கேட்டுத் திகைத்தது.

எங்கிருந்தோ ஒரு லாரி சக்கரம் மட்டும் உருண்டோடி வந்து, சிற்றுண்டி வண்டியில் மோதி சிதறடித்தது.

வள்ளுவர் அந்த சக்கரத்திற்குரிய வண்டியை ஆச்சரியமாகப் பார்த்தார். ஒரு லாரி. அதற்குள் இருந்த சரக்கு சாமான்கள் வண்டியையே உருவம் தெரியாமல் மறைத்துக் கொண்டு கிடந்தன. வந்த வேகத்தில் அது பாரம் தாங்காமல் தலைகுப்புற