பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 79

கொள்ள வேண்டும் என்று நினைப்பதுமில்லை. நடப்பதுமில்லை.

நாளுக்கு நாள் உடல் மெலிந்து போகிறபோது, விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து, ஒப்பனை செய்து அதை உயர்வாகக் காட்டவே முயல் கின்றனர். அதைத் தான் பெருமை என்றும் பேசு கின்றனர்.

அளவல்ல செய்தாங்கே வீவர் (289). அளவற்ற ஆகாத தகாதக் காரியங்களை செய்து கொண்டு, தாங்களே அழிந்துபோவர் என்று நீங்கள் பாடிய குறளை, நானும் நினைத்துப் பார்க்கிறேன்.

இப்பொழுது நாம் பார்த்தது ஆரம்பம் தான். இன்னும் பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது

என்றேன்.

அதோ பாருங்கள் என்று ஒன்றைக் கை நீட்டி ஆச்சரியத்துடன் காட்டினார் வள்ளுவர். எனக்கே அது ஆச்சரியமாக இருந்தது.

அங்கே என்ன கூட்டம்! ஆரவாரம்!

இருவரும் திரும்பிப் பார்த்தோம்!

நீண்ட வரிசையில், மக்கள் கூட்டம். அவர்கள் போட்டதோ அலைகடலையும் அடிக்கும் சத்தம்.