பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

‘ஒழிக ஒழிக’ என்ற கூக்குரல் தான், ஒங்கார மாக ஒலித்தது.

அத்தனை பேர்களுக்கும் ஆவேசம் எப்படித் தான் வருகிறதோ! ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்தார் வள்ளுவர். என்ன கூட்டம் என்பது போல என்னைப் பார்த்தார். -

நாட்டை ஆள்வதற்கு ஆசைப்படுகிற மக்கள், ஒன்று சேர்ந்த இயக்கங்கள் இங்கே நிறைய இருக் கின்றன. அந்த இயக்கத்திற்கு அரசியல் கட்சி என்பது பெயர்.

இது அரசியல் கட்சி ஒன்றின் பேரணி. இப்படி ஆட்களை சேர்த்துக்காட்டினால்தான்,தங்கள் கட்சி பெரிய கட்சி என்று பொது மக்கள் கருதுவார்கள். இதனால் பிற்காலத்தில் பணம் பண்ண முடியும் ! என்று முயல்கிற முயற்சி என்றேன்.

அதெப்படி ? அவர்கள் வாழ்க என்று வாழ்த் தாமல், ஒழிக. என்றல்லவா சத்தம் போடுகின் றார்கள்’ என்றார்.

வாழ்க என்று கூவும் போது மனதுக்கு அவ் வளவு மகிழ்ச்சி வருவதில்லை. ஒழிக. என்று கத்தும் போது தான். உள்ளத்தில் பூரண திருப்தியே வருகிறது.