பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 8 | *

இந்தக் கூட்டத்தில் முக்கால் வாசிப்பேர், கூலிக்காக வந்து கத்துபவர்கள். கட்சிக்காரர்கள் அல்லர். வறுமை தான் அவர்களுக்கு வாழ்வு. கூலி வேலைக்குப் போய் உழைத்தால், கூலியாக பணம் வரும். இங்கே வந்து கூட்டத்தில் கலந்து கொண்டால், கத்துவது தான் வேலை. மாலை யான பிறகு கூலி. எதைச் சொன்ன்ாலும் செய்ய வேண்டியது அவர்கள் வேலை என்றேன்.

அதற்கு ஒழிக. என்று ஏன் கத்த வேண்டும் ?

அண்ணன் எப்பொழுது சாவான். திண்னை எப்பொழுது காலியாகும் என்பது தானே நம் நாட்டுப் பழமொழி. ஒருவர் அழிவில் தான், மற்றொருவர் வாழ்வு முளைவிட ஆரம்பிக்கிறது.

அடுத்தவர் அழியும்வரைக் காத்திருக்க, இப்பொழுதுள்ள, மக்கள் விரும்பவில்லை. ஒழிக ஒழிக ஒழிக. என்று கத்தி, உள்ளத்தில் சாந்தியடை கின்றார்கள். ஆமாம்! அவர்களுக்கு வேண்டியது பதவி, அதிகாரம், பணம், கேளிக்கைகள் என்றேன்.

எனக்கு ஒன்று புரிய வேண்டும். அவர்கள் போர் போர் என்றும் கத்துகின்றார்களே! எந்தப் போருக்கு, எங்கே போகின்றார்கள் என்று கேட் டார். வள்ளுவர்.

முற்காலத்து தமிழர் வாழ்வை நீங்கள் இரண்டு. பிரிவாகப் பிரித்துக் காட்டியிருக்கின்றீர்கள் வீர