பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கும்பலாகி நின்ற அந்த உருவம், என் மீதுமோதியது மட்டுமன்றி, கீழே விழுந்தும் கிடந்தது.

பரிதாபமாகப் பார்த்தார் வள்ளுவர்! தமிழ் இனம் தேக்கு மரம் போல வலிமையாய் வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது. இன்று சிறு அதிர்ச்சியைக் கூட தாக்குப் பிடிக்க முடியாத துரும்பு இனமாகப் போய் விட்டது என்று துடித்தார் வள்ளுவர்.

மனிதர் என்ற பெயரை மாற்றி, ஒன்றுக்கும் உதவாத கயவராக அல்லவா மாறிக் கொண்டு விட்டனர் என்றெல்லாம் மனம் புழுங்கினார்.

தான் செய்கிற காரியம் இன்னதென்று புரியாமல், குழப்பத்துடன் செய்து கொண்டு வாழ்கின்றனரே இந்த மக்கள்! இப்படி வாழ்வதும் ஒரு வாழ்வா? எதற்குப் பிறந்தார்கள் இந்த மக்கள்? ஏன் இந்தத் தமிழ்ச் சாதியின் பெயரையும் புகழை யும் இப்படி தாழ்த்துகின்றார்கள்! வீழ்த்துகின் றார்கள்!

கேவலம்! ஒரு நாள் வயிற்றைக் கழுவ, தங்களையே கொள்கையில்லாமல், விற்றுக் கொள்கிற கோமாளி குரங்கு மக்களாகத் தானே திரிகின்றார்கள் என்ற கோபத்தில், வள்ளுவர் பாடத் தொடங்கினார்.

எற்றிற் குரியர் கயவர்ஒன்று உற்றக்கால் விற்றற் குரியர் விரைந்து. (1080)