பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 1

இப்படிப்பட்ட கீழ்க் குணம் கொண்ட மக்கள், வேறு எந்தத் தொழிலுக்கும் ஏற்றவர்களாகவே இருக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு துன்பம் வந்து விடுகிறபொழுது, அதைத் தீர்க்கத் தெரியாமல், திங்களையே விற்று, பிறருக்கு அடிமையாகிப் போகின்றவர்கள்.

ஒரு சிறு துன்பத்தைக் கூட பொறுக்க இயலாமல். தமது மனைவி மக்களைக் கூடவிற்று விடுகின்ற வீணான மக்கள் என்று, நான் அன்று பாடினேன். இன்று என் முன்னே, விழுந்து கிடக் கின்ற இந்த மனிதரைப் பார்க்கிறேன். இந்தக் கூட்டமே இப்படித் தான் போலும் என்றார்.

பெற்றாளே பெற்றாள், பிறர்ககைக்கப் பெற்றாளே எற்றோ மற்றெற்றோ மற்றெற்று.

என்று ஒளவை பாடிய பாட்டையும், நான் பாடிக் காட்டினேன், -

பிறர் இகழ்ச்சியாகப் பேசி, சிரிக்கும் நிலையில் ஒருத்தி பெற்றுப் போட்டுவிட்டுப் போய்விட்டாளே என்ற கருத்தை நான் கூறியதும், அவர் சற்று. கலங்கியவர் போலக் காணப்பட்டார்.

இந்த உலகம் என்பது உயர்ந்தோர் உலா வருகிற உன்னதமான இடம். இங்கு அறிவும் ஆண்மையும் உடைய மக்களுக்கே, ஆனந்த வாழ்வு