பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 13

சென்று அச்சடித்து வழங்கினார்கள். உரிமையைப் பெற்றுக் கொண்டு விட்டார்கள். விலை நான்கனா விதிக்கப் பெற்றது.இப்படிச் சொன்னதனாலேயே நீங்கள் ஒரு கடிதம் எழுதிப் போட்டு விடாதீர்கள், புத்தகம் வேண்டுமென்று. பதிலே வராது.நேரிலே போய்க் கேட்க லாம் என்று துணிந்து போனால் புத்தகம் அங்கு இருக் காது. நாங்கள் அச்சடிக்கிறோம் என்று கேட்டாலும் அச்சடிக்கிற உரிமையும் கொடுக்கமாட்டார்கள். இது இன்று அவர்கள் செய்யும் நல்ல தமிழ்த்தொண்டு!

அல் வரலாற்றினுடைய தொகுப்பு இதுதான். "வள்ளுவர் ஒரு சிறந்த தமிழ் மகன். நல்ல வேளாண்குடி மரபினர். அவர் பிறந்தது. வாழ்ந்தது, இறந்தது அனைத்தும் மதுரை. அவர் பாண்டிய மன்னனுக்கு அரசனது உள்படு கருமத் தலைவராக (Private Secretary) இருந்தவர் அதாவது, அரசனது கருத்தை மக்களுக்கு அறிவிக்கும் தொழிலைப் பெற்றிருந்தவர் இந்தத்தொழில் காரணமாகவே வள்ளுவர்” என்ற பட்டத்தைப் பாண்டி யனால் பெற்றவர். நல்ல வேளாண்குடி மகளை மனைவி யாகப் பெற்றவர். உலகத்தை நோக்கி ஒரே நூலை நன்றாகச் செய்து கொடுத்து நம்மை விட்டு மறைந்தவர். இதுதான் அந்நூலின் தொகுப்புக் கருத்து. வள்ளுவரைப் பற்றி அறிவிக்க இதுபோதும். -

வள்ளுவர் ஆதியென்ற புலைக்குடி மகளுக்கும் பகவன் என்ற உயர்குடி மகனுக்கும் பிறந்தார் என்று எழுதிய கதை பொய் என்பதற்கு எனக்குக் பொய்யும் மெய்யும் கிடைத்த சான்று ஒன்றுண்டு. அதா வது திருக்குறளை முதன் முதலில் ஒலைச்சுவடியிலிருந்து அச்சேற்றியவர்கள் இரண்டு பெரும் பேராசிரியர்கள். முதற் பேராசிரியர் திருத் தணிகை விசாகப்பெருமாளையர். அடுத்தவர் யாழ்ப் பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர். இருவரும் சுவடி களில் இருந்து ஒப்பு நோக்கித்தான் எழுத்து விடாமல் திருக்குறளை அச்சியற்றி நமக்குக் கொடுத்தார்கள்.