பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 2.3

வரலாற்றுப் பேராசிரியனாக இருந்தாலும் சரியே, அவன் திருக்குறளைப் படித்திராவிட்டால் அவனது அறிவிலே ஒரு பக்கம் இருள் அடிக்கும். அதையும் படித்துவிட்டால் ஏற்கெனவே உள்ள அறிவுக்கு ஒரு புது மெருகு உண்டா கும் என்று முடிவு கட்டிவிடலாம். இது திருக்குறளுக்கு உள்ள தனிச்சிறப்பு. இவ்வளவு போதும் திருக்குறளைப் பற்றி.

திருவள்ளுவர் திருக்குறள் ஒன்றைத்தான் செய் தாரா? என்ற ஐயமும் இப்பொழுது ஆசிரியரும் ஐயமும் நம்மிலே பலருக்கு வந்திருக்கிறது. சில புலவர்கள் இப்பொழுது ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள், திருவள்ளுவர் இரண்டு நூல்களைச் செய்தாரென்று. அவர்களும் புலவர்கள்தான்.

அவர் செய்த மற்றொரு நூல், ஞான வெட்டி' என்று கூறுகிறார்கள். ஞானத்தை அப்படியே இரண்டாக வெட்டிவிட்டதாக எழுதி வைத்திருக்கிறார்கள். அதைப் பார்ப்போம். இன்று நான் ஞானவெட்டி திருவள்ளுவர் செய்தது அல்ல என்று உங்களிடத்தில் சொல்லிக்கொண் டிருக்கவேண்டியதில்லை. ஒரு குறளைப் படித்தவர்கள் கூட ஞான வெட்டியைப் புரட்டிப்பார்த்தால் இது திரு வள்ளுவர் வாக்கு அல்ல என்ற முடிவுக்கு வந்துவிடு வார்கன் அவ்வளவு எளிது. அது நான் தான் இப் மொழுது சொல்கிறேனே ஒரு அடி-ஞான வெட்டியிலே! குறள் நடைதான் உங்களுக்குத் தெரியும். கூறவேண்டிய தில்லை. ஞான வெட்டியின் நடையைப் பாருங்கள்! "பாரப்பா இந் நூலைப் பாரு! பாரு பகர்கின்றேன் இதன் கருத்தைக் கேளு! கேளு' என்று இருக்கும் இதன் நடை! இதைப் படிக்கும்போதே நமக்கு, 'யாரப்பா இந்நூலைச் செய்த ஆளு?' என்ற ஐயம் வந்துவிடும் (சிரிப்பு). ஆகையினாலே, அவர் செய்த நூல் திருக்குறள் ஒன்றே என்று துணிந்து கூறலாம். அவர் ஒன்றே