பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வள்ளுவரும் குறளும்

செய்தார். அதுவும் நன்றே செய்தார், அதையும் அன்றே செய்தார்.

அடுத்தது பண்பு தமிழருக்கு, தமிழ் நாட்டுக்கு

என்றே ஒரு சிறந்த பண்பு அந்தக்

தமிழர் பண்பு காலம் தொட்டு இந்தக் காலம் வாை

யிலும் இருந்து வந்திருக்கிறது.

அந்தக் காலமென்றால் கல் தோன்றி மண்தோன்றாக் காலம் சேர, சோழ பாண்டியர்கள் எந்தக் காலத்தில் தோன்றினார்களென்று ஆராயலாம். மண் தோன்றாக் சூரியன் தோன்றிய காலத்திலிருந்து காலம் நான் தோன்றினேன் என்று சூரிய வட்டக் குடையைப் பி டி. த் து சோழனும், சந்திரன் தோன்றிய காலத்திலிருந்து நான் தோன்றி னேன் என்று சந்திர வட்டக் குடையைப் பிடித்துப் பாண்டியனும் போட்டிப் போரிட்டுக் கொண் டிருந்தார்கள். இவர்களின் மரபு சூரிய சந்திரர்கள் தோன்றிய காலத்திலேயிருந்து தோன்றிவிட்டதா? என்று ஐயம் வந்த பிறகு, இந்தப் புலவர்கள் அல்ல' என்று கூறி, இவர்கள் தோன்றிய காலத்தைக் கணக் கிட்டு வைத்தார்கள் எப்போது உலகம் தோன்றி, மலை கள் தோன்றி, பாறை கல்லாயிருந்து, மழை பெய்து பெய்து, கற்கள் கரைந்து மணல் ஆன காலம்; கல் தோன்றியதற்குப் பின்னும் மண் தோன்றுவதற்கு முன்னும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தார்களென்று கண்டுபிடித்து விட்டார்கள்.

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடியினர் என்பது மூத்த குடியினர் சேர சோழ பாண்டியர்களுக்கு இலக் கியச் சான்றாகும். இலக்கியம் நமக்குத் தருகின்ற உண்மை அது.