பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர்

டாக்டர் மு. வரதராசனார், M.A., M.O.L, Ph.D.

திருக்குறள் உலக நூல்களில் உயர்ந்த நூல்; தமிழர் களுக்கு தெவிட்டாத அறிவு விருந்து. எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்த பிறகும் எவ்வளவோ அரசியல் சமய, சமுதாய மாறுதல்கள் ஏற்பட்டு மாறிய பிறகும். திருவள்ளுவரின் நூல் இன்று நம்முடன் வாழ்ந்து, நமக் _காக அறிவுரை கூறும் சான்றோர் ஒருவரின் தெளிந்த

வாய்மொழி போல் விளங்குகிறது.

இவ்வளவு உயர்ந்த நூலைப்பற்றி ஒருசொற்பொழிவு நடைபெறுகிறது என்றால், அது பலருடைய உள்ளத் தையும் கவர்தல் இயற்கை. சொற்பொழிவு ஆற்றுகின்றவர் தேர்ந்த பேச்சாளர் என்றால், இச்சிறப்புப் பலமடங்கு ஆவதும் இயற்கையே.

திருவாளர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் எதையும் சுவைப்படப் பேசுவதில் வல்லவர். நுண்ணிய கருத்துக் களுக்கும் அழகிய வடிவம் தந்து, வினாவிடை புகுத்திக் கேட்போருக்கு வேட்கையை வளர்த்து விருந்து நல்குவது அவர்தம் பேச்சு.

சொற்பொழிவாளர், திருவள்ளுவரைப் பற்றிய கதைக் குப்பைகளை எல்லாம் கட்டுக்கதை என ஒதுக்கியது மகிழத் தக்கது. திருவள்ளுவர் கூறும் உவமைகளை எல்லாம், அரிய சிறுகதைகளாகக் கூறி விளக்கி உவமைத் திறனைப் பாராட்டியுள்ளார் ஆசிரியர். அதிகாரிகளுக்கும் குடிகளுக்குமிடையே உள்ள உறவும். ஒருவர் மற்றொரு