பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 41

டம் அஃதின்றேல் புண் என்று உணரப்படும். பேனாக் கத்தியால் கன்னத்திலே கிழித்துவிட்டுக் காட்டினால் பார்க்குமா? அது ஏன்? அம்மைதான் வைக்கிறோமே.

கண் மாதிரித்தானே இருக்கிறது! காட்டுங்கள் ஒரு கடி தத்தை. அது பார்க்குமா? படிக்குமா? முகத்திலே கிழித்து விட்டிருக்கிறது அவ்வளவுதான்! துன்பப்படுகிற மக் களைப் பார்க்காமல் விறைத்துக் கொண்டு போகிறது!

அது நகை போடாத கண் எப்படி வள்ளுவர் போட்ட

நகை. பார்த்துக் கொள்ளுங்கள்! இந்த நகையைப்

போடுங்கள் நீங்கள் எந்த நகையில்லாவிட்டாலும் இந்த நகை வேண்டும் உங்களுக்கு!

வள்ளுவரை நினைக்கும்போதெல்லாம் என் உள்ளம் பெரிய உள்ளமாக விரிகிறது . காரணம் என்ன? மக்கள் சமுதாயத்தைத் துரக்கி இரண்டு வள்ளுவர் உள்ளம் கைகளாலும் அள்ளி, அள்ளிவிட்டவர் வள்ளுவர். 'உள்ளுவதெல்லாம் உயர் வுள்ளல்.’’ எண் ணு, நல்லதை எண்ணு! பெரியதை எண்ணு! ஏன்? அப்படியே நீ ஆவாய். இப்படித் துரக்கி விட்டவர் வள்ளுவர். இரண்டு கைகளாலும் தூக்கி இமயத்திற்கு மேலே அள்ளிவிடுகிறார் அவர். எண்ணு! எண்ணு! நல்லதை எண்ணு! பெரியதை எண்ணு! உயர்வை எண்ணு சிறப்பை எண்ணு! அழுத்தமாக எண்ணு! ஆழமாக எண்ணு! இப்படிச் சொல்லிவிட்டால் போதாதாம். இந்தக் கன்னத்திலே வேறு திருப்பி அடிக் கிறார்.

'உள்ள ற்க உள்ளம் சிறுகுவ' என்று குறுகின புத்தியை ஒருநாளும் கொள்ளாதே. என்று, இப்படி ஒர் அறை.

'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினிம் தள்ளாமை நீர்த்து'