பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வள்ளுவரும் குறளும்

பணம் தேவையில்லை. எல்லோரும் வாங்கிப் போடலாம் என்றார். எப்படி' என்றால், "துன்பப்படுகிற மக் களை பார்த்துக் கண்ணிரை முத்து முத்தாகச் சொட்டு! அது தான் கண்ணுக்கு நகை என்கிறார் அந்தச் சொற் களைப் பாருங்கள் கண்ணுக்கு அணிகலம்! கண்ணுக்கு நகை எது? கண்ணோட்டம் கண்ணுக்கு அணிகலம் கண் ணோட்டம். சாலையிலே, மாலை நேரத்திலே, நள்ளி ருளிலே மழையிலே 90 வயதுக் கிழவி, எந்தக் குலமோ? யாரோ? முழு ஆடையின்றி, குளிரில் நடுங்கி வெப்பு நோயால் வருந்துகிறாள் என்று வையுங்கள். அதைப் பார்த்து ஒருவன் மோட்டாரிலே போய்க்கொண்டிருந் தால் என்ன பயன்? அவன் அழகாய்த்தானிருக்கின்றான்; மன்மதன் மாதிரி இருக்கிறான் அவன் முகத்தில் அழகு ஒளி வீசுமா? ஆனால், இந்தக் கொடுமையைப் பார்த்து ஒருவன் பல் நீண்டவன் கன்னங்கரேர் என்றுஇருக்கிறவன் இன்னொரு கந்தலை உடுத்திக் கொண்டு, ஐயோ! யார் வீட்டுக் கிழவியோ? மழை துாறுதே! வெப்பு நோய் வருத்து கிறதே! ஆடையில்லையே' என்று தன் துண்டை அவள் மேல்போர்த்தி கையில் துரக்கி, ஆஸ்பத்திரிக்குக்கொண்டு போகலா மென்று பார்த்துக் கண்ணிர்விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் முகம் எப்படி இருக்கும் மைசூர் மகாராசாவைவிட அழகாகத் தோன்றும் சிரிப்பு, அவ்வளவு அழகு தருமே அது! கற்பனையா இது? உண்மை! மன்னாதி மன்னனெல்லாம் இவன் அழகுக்கு முன்னாலே ஒளிகுன்றி நிற்பானே. அவனது உள்ளம் அந்த ஒளியை வீசுகிறது! அதையெண்ணி அவர் சொன் னார்.

'கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும்' இன்றேல் கண்ணா அது? புண்! அவர் கண்ட இலக் கணம் என்ன? கண் என்றால் அறியும்; புண் என்றால் அறியாது என்பதே கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்