பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 105

போனால் வேறு உடைமைகள் தேடிக்கொள்ளலாம். கை கால்கள் போனால் பொய்க் கை - பொய்க் கால் வைத்துக் கொண்டு வழக்கம்போல் எதையும் செய்யலாம். கண் போனாலும் வேறு கண் வைக்கப் பெற்றுத் திரும்பப் பார்வையைப் பெறலாம். இவற்றையெல்லாம் இக்கால விஞ்ஞானிகள் செய்து முடிக்கின்றார்கள் அல்லவா? உயிர் போனால் திரும்பி வருமா? வேறொருவருடைய உயிரைத் தான் பொருத்தமுடியுமா? அதனால் உடைமைகள் - உறுப்புகள் ஆகியவற்றினும் உயிர் சிறந்ததென்பது புலப்படு மன்றோ? மேலும் உடைமைகளேயில்லாத கோடிக்கணக் கான ஏழை யெளியவர்கள் உலகில் வாழ்வதைக் காண்கின்றோமே? உடலுறுப்புகளை இயற்கையாகவோசெயற்கையாகவோ இழந்துவிட்ட கூன், குருடர், நொண்டி, முடவர் எண்ணற்றவர்கள் உலகில் வாழக் காண்கின்றோமே! ஆனால் உயிர் போனபின் வாழ்ந் தவர்களை என்றேனும் எங்கேனும் யாரேனும் பார்த்த துண்டா? உயிர் போனபின் பிணம் என்றல்லவோ பெயர்? அதன் நிலைதான் எல்லோர்க்கும் தெரியுமே! இத்தகைய காரணங்களினாலேயே, மற்றையவற்றைக் குறிப்பிடாமல், உயிரினும் ஒம்பப்படும் என்று உயிரையே குறித்தார் நம் வள்ளுவர்.

மற்றும், ஆசிரியர் உயிரைப்போல் ஒழுக்கம் ஒம்பப் படும் என்று கூறி உயிரும் ஒழுக்கமும் ஒரு நிலையுடையன என்றுகூடக் கூறவில்லை; உயிரைக் காட்டிலும் ஒழுக்கம் ஒம்பப்படும் என்று கூறி உயிரினும் உயர்ந்த பொருளாக ஒழுக்கத்தைச் சிறப்பித்துள்ள மாட்சி மிகப் பாராட்டுதற்