பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 109

அவ்வவரைப் பெயரிட்டு அழைத்தனர். செந்தண்மை யாகிய அந்தண்மை பூண்டு ஒழுகுபவன் (பார்ப்பான்) அந்தணன், பறையடிப்பவன் பறையன் என இங்ஙனம் அழைத்து வந்தார்கள். எனவே, ஒழுக்கம் குறித்து சாதிப் பிரிவினை ஏற்படவில்லை; தொழில் குறித்தே ஏற்பட்டது என்னும் கருத்தினை, நம் திருவள்ளுவர்

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்’

என வெட்ட வெளிச்சமாக அறிவித்துவிட்டார்.

உண்மை இங்ஙனமிருக்க, ‘ஒழுக்கமுடைமை குடிமை” என்னும் இக்குறளுக்கு, ஒழுக்கமுடைமை உயர் சாதித் தன்மை- ஒழுக்கமின்மை இழி சாதித்தன்மை என்னும் கருத்தில் உரையாசிரியர்கள் பலரும் உரை பகர்ந்திருப்பதும், பரிமேலழகர் இக் குறளில் வருணத்தை இழுத்து மாட்டி யிருப்பதும் அறியாமையும் வருந்தத்தக்கதுமாகும். ‘ஏன்? இவ்வுரையாசிரியர்கள்மேல் என்ன தவறு? ‘ஒழுக்கமுடைமை குடிமை-இழுக்கம் இழிந்த பிறப்பு என்று வள்ளுவர்தான் வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றாரே-அதைத்தான் இவர்களும் எழுதினார்கள். இது சரியில்லையென்றால் எது சரி?” என்று நம்மைச் சிலர் வினவலாம். ஆதலின் இக் குறளின் உண்மைக் கருத்தைத் தெளிவுறுத்துவோம்:

முதலியார் என்னும் ஒரு சாதியை எடுத்துக் கொள்வோம். அம்முதலியாருள்ளும் பல முதலியார் பிரிவுகள் இருக்கலாம். அவற்றுள் ஏதேனும் ஒரு பிரிவு முதலியார் சாதியினரை ஈண்டு எடுத்துக்கொள்வோம். அவர்களே தம்