பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 119

‘உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.”

என்று அருளியுள்ளார்.

எதிர்காலம் மாறக்கூடும் என்பதை முன் கூட்டியே நுனித்துணர்ந்து வள்ளுவர் இக்குறளைக் கூறவில்லை யென்றால் அவருக்கு என்ன மதிப்பு: இதனாலேயே திருக்குறள் என்றும்-எங்கும்-எவரும் போற்றும் பொதுநூல் என்னும் பெயர் பெற்றதல்லவா?

பவணந்தி முனிவரும் தம் நன்னூலில்,

“பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே,'’

என்று கூறியுள்ளமையை நோக்குக.

ஒரு காலத்தில் நல்லொழுக்கமாகக் கருதப்பெற்றது மற்றொரு காலத்தில் இழுக்கமாகவும், ஒரு காலத்தில் இழுக்கமாகக் கருதப்பெற்றது மற்றொரு காலத்தில் ஒழுக்கமாகவும், ஒரிடத்தில் ஒழுக்கமாகக் கருதப்பெற்றது மற்றோரிடத்தில் இழுக்கமாகவும், ஒரு காலத்திலேயேஓரிடத்திலேயே - ஒரு கூட்டத்தாரால் ஒழுக்கமாகக் கருதப்பெற்றது மற்றொரு கூட்டத்தாரால் இழுக்கமாகவும், ஒரு கூட்டத்தாரால் இழுக்கமாகக் கருதப்பெற்றது மற்றொரு கூட்டத்தாரால் ஒழுக்கமாகவும் கருதப்பெறக்கூடும். இவற்றிற்கெல்லாம் எடுத்துக்காட்டு (உதாரணம்) தர வேண்டுமாயின் விரியும். எனவே, காலத்திற்கேற்ப, இடத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப மக்கள் தத்தம்