பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 139

பொறுத்துக் கொண்டவர்க்கோ,அன்று ஒரு நாளைக்குத் தான் துன்பம்; பின்னர் இருக்கும்வரையும் உலகினரின் புகழைக் கேள்விப்படுதலால் மனத்திற்கு இன்பமேயாம். இறந்த பின்னும் அப்புகழ் நிலைக்கும்.

‘நிறையுடைமை நீங்காமை வேண்டின்

பொறையுடைமை போற்றி ஒழுகப் படும்.’ ‘ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து’. ‘ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றும் துணையும் புகழ்.’

பிறர் நமக்குத் துன்பம் செய்தால், நாம் மீண்டும் அவர்க்குத் துன்பம் செய்யாமல் அவரை மன்னிப்பதோடு, அவருடைய அறியாமைக்கும் அதனால் அவர்க்கு உண்டாகப் போகும் துன்பத்திற்கும் பழிக்கும் இரங்கி வருந்தவும் வேண்டும்.

தம்மைச் சிலுவையில் அறைந்த தீயோர்களுக்கு ஒரு துன்பமும் செய்யாமல் காக்கவேண்டும் என்று ஏசுநாதர் இறைவனிடம் வேண்டியதாக வழங்கப்படும் வரலாறு ஈண்டு ஒப்பு நோக்குதற்கு உரியது. தமக்குத் தீங்கிழைத் தவரை மன்னிப்பதோடு, அதனால் அவர்க்கு என்றும் எவராலும் எத்தீங்கும் நேராதிருக்கவும் முயல வேண்டும்.

பணம், படிப்பு, பட்டம், பதவி முதலியவை மிக்குள்ள ஒருவர் நம்மிடம் இறுமாப்பாக நடந்து கொண்டபோது, நாம் அதைப் பொருட்படுத்திக் கண்டுகொண்டதாகக் காண்பிக்காமல், அமைதி (பொறுமை)யாக நடந்துகொள்