பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 143.

எரிந்து சாகாதே என்றுதான் கூறப்படுகிறது. எனவே, தான் வளர்ச்சி அடைவதற்குச் சூழ்நிலை சரியாயில்லை யெனில், பிறனைக் கண்டு எரிந்து சாகாமல், சூழ்நிலை சரிப்படும்வரை அமைதியுடன் வாழவேண்டும் என்பது தெளிவு. பகைவரிடம் பொறாமை கொள்ளலாம், நண்பரிடமே பொறாமை கொள்ளக்கூடாது என்று எண்ணவேண்டாம். நண்பர்-பகைவர், வேண்டியவர்-வேண்டாதார் என்னும் எவரிடமும் பொறாமை கூடாது; பகைவரிடம் பொறாமை காட்டப் பழகினால், பின் அது நண்பரிடமும் காட்ட ஏதுவாகும்; ஆதலின் எவரிடமும் கூடாது.

‘ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.’ ‘விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்

மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்.” அறமும் பொருளும் வேண்டுமானால் பொறாமை கூடாது. பிறனது வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படுபவன், மனம் நொந்து புழுங்குவதிலும், பிறனது வளர்ச்சியைக் கெடுக்கமுயல்வதிலுமே தன் காலத்தைச் செலவழித்துக் கொண்டிருப்பானாதலால், தான் பொருள் ஈட்டுவதற்குத் தனக்கு நேரம் இல்லாமற் போகும்; போகவே, தனக்குப் பொருள் இல்லாமற்போகும். அதனோடு தன்னுடைய தீக் குணத்தையும் தீச் செயலையும் கண்ட உலகினர், “இவன் அறவொழுக்கம் இல்லாதவன்’ என்று பழிப்பர். ஆதலால், பொறாமைக் குணமுள்ளவன் அறமும் - பொருளும் பெறாதவனாகின்றான். பிறனாக்கம் கண்டு