பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் இல்லம்

உலகில் உயர்திணையாகிய மக்களும் வாழ் கின்றனர் - அஃறிணையாகிய வேறு எல்லா வகை உயிர் களுந்தான் வாழ்கின்றன; மக்களும் ஆணும் பெண்ணுமாய்ச் சேர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றனர் - மரஞ் செடி கொடிகள் உட்பட மற்ற உயிர்களுங்கூட அவ்வாறே ஆணும் பெண்ணுமாய் இணைந்து இனவளர்ச்சி செய் கின்றன. ஆயினும், இவ்விருதிணை உயிர்களின் வாழ்க்கை களுக்கிடையே பெருத்த வேறுபாடு உள்ளதென்பதை எவரும் மறுக்கவியலாது. மற்ற உயிர் வாழ்க்கையினும் மக்கள் வாழ்க்கைக்குச் சிறப்பளிக்கும் வாழ்க்கை முறை ஒன்றுண்டு; அதுதான் இல்லற வாழ்க்கை.

இல்லறம் என்பது, ஒர் இல்லம் (வீடு) அமைத்து கணவனும் மனைவியும் உள்ளங் கலந்து, மக்களுடனும் மற்றவருடனும் அறநெறி நின்று நடத்தும் குடும்ப வாழ்க்கை யாகும். ஏன் - அஃறிணை உயிர்களுங்கூடத்தான் ஆணும்