பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 165

நண்பர் உம்மைப் பற்றி இழிவாகப் பேசினார்’ என்று சொல்லி விடுவார். அதைக்கேட்ட அந்நண்பர், இவனது அன்பையும் நண்பையும் நம்பாமல் பொய்யெனக் கொண்டு இவனைவிட்டுப் பிரிந்துவிடுவார். எனவே, புறங்கூறும் இயல்புள்ளவன் தன் புறங்கூறும் தீச்செயலால் தன் நண்பரையும் பகையாக்கிப் பிரித்து விடுவான்.

இவ்வாறு நெருங்கிப் பழகும் உறவினர் - நண்பர்

முதலியவருடைய குற்றத்தையே விடாமல் அவரறியாது துற்றிக்கொண்டிருப்பவர்கள், அயலாருடைய குற்றத்தைப் புறத்தே சென்று தூற்றுவதை வாயால் சொல்லி முடியுமா? எழுத்தால் எழுதி முடியுமா? மிக மிக மிகத் தூற்றுவார்கள் அல்லவா?

‘பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றாதவர்.’

“துன்னியார் குற்றமுங் துாற்று மரபினார்

என்னைகொல் ஏதிலார் மாட்டு.’

புறங்கூறுபவன் தனக்கும் பிறர்க்கும் தீமையே தேடு

வதால் அவன் இருப்பதைவிட இறப்பதே மேலென்று முன்னரே வள்ளுவர் கூறியுள்ளாரல்லவா? அவன் இறவா தவன்போல் உலவிக் கொண்டிருந்தாலும் இறந்தவனாகவே கருதப்படுவான். அவனது உடல் நிலத்திற்கு (பூமிக்குச்) சுமையாய் (பாரமாய்) இருப்பதைத் தவிர வேறொன்றற்கும் உரியதன்று. அங்ஙனமிருக்க, இறந்தவன் உடலைத் தன்னுள் மறைத்துக்கொண்டு மக்கச் செய்தோசுட்டெரித்தோ வெளியில் தெரியாதபடிச் செய்துவிடும் இயல்புடைய நிலம், இவனுடைய உடலை மட்டும் சுமந்து