பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 வள்ளுவர் இல்லம்

கேட்டு மகிழ்ந்து சிரிக்கும்படிப் பலரைக் கிண்டல் செய்தும்புண்படுத்தியும் - கெட்ட சொற்களைக் கலந்தும் பேசு கிறார்கள் அல்லவா? அது கூடாது. அப்படிப் பேசினால் அவரைக் கற்றறிந்த பேரறிவாளர்கள், எளிய பாமரமக்கள் ஆகிய எல்லோருமே ‘வெற்றுவேட்டு வீணன்’ என்று இகழ்வார்கள் என்பதை யறிவிக்கவே “எல்லாரும் எள்ளப் படும்’ என்றார்.

நண்பரிடத்தில் நயமாக (இனிமையாகப்) பேசாமல் கடுமையாகப் பேசுவதைவிடப் பலர்முன் பயனற்றவற்றைப் பேசுதல் தீயதாகும். தப்பித்தவறி நண்பர்களிடத்தில் நயமின்றிக் கடுமையாக நடந்துகொண்டாலும், அவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்; ஆனால், பெரும்பான்மையான பொதுமக்களின் முன் பயனல்லவற்றைப் பேசினால் அவர்கள் பொறுக்காது வெறுப்பர். பயனற்ற சொற்களைக் கூட வேடிக்கை விளையாட்டிற்காகத்தம் நண்பரிடையே சிறிது பேசிக் களித்துப் பொழுது போக்கலாமே தவிர, பலர்முன்னிலையில் பேசக்கூடாது.

ஒருவன் நயம் இல்லாதவன் என்பதை அவனது பயனற்ற பேச்சேயறிவித்துவிடும். எனவே, அவனது தன்மைக்குச் சான்று அவனது செயலே என்பது புலனாகும். பயன் இல்லாத பேச்சு என்றால், பிறரைப் புண்படுத்தக் கூடிய பேச்சு - ஊர் வம்புப் பேச்சு - என்று தானே பொருள்? பிறரைப் புண்படுத்தும் செயலுடையவனிடம், பிறரிடம் நயமாகப் பேசிப் பண்படுத்தும் இயல்பு எங்ஙனம் இருக்க முடியும்? சிறிது நேரம் பேசினாலுமே புண்படுத்தக் கூடிய பேச்சினை நீண்ட நேரம் பாரித்துப் பேசுபவ