பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 வள்ளுவர் இல்லம்

இப்படியே கொள்க! இதுபோலவே, பயனுள்ள சொல் சொல்லுபவனை உண்மையான மனிதனென்று சொல்லுங் கள்! பயனிலாத சொல் சொல்லுபவனை உண்மையான மனிதனென மதிக்காமல், மனிதப் பதர் என்று சொல்லுங் கள்! என்று வள்ளுவர் கட்டளையிடுகிறார்.

ஈண்டு மனிதனுடைய சொல்லுள் பயன் இருத்தல், நெல்லினுள் அரிசி (உள்ளீடு) இருப்பது போல, சொல்லுள் பயன் இல்லாமை, நெல்லுள் அரிசியில்லாமை போல - ஆகும். எனவே பயனில்லாத சொல்லன் பதடி (பதர்) தானே! உலகில் உயர்ந்தவர்கள் பயனுள்ளதைத்தான்: உயர்ந்ததாக - இன்றியமையாததாகப் பாராட்டிப் பேசுவது வழக்கம். இந்த முடனோ பயனற்றதையே உயர்ந்த தாகவும் - இன்றியமையாததாகவும் பாராட்டிப் பேசுவான்; இது புல்லை நெல்லென்று கூறும் பொய்யுரையாகும்.

பயனில்சொல் பாராட்டு வானை மகன் எனல் மக்கள் பதடி எனல்’

‘இனியவை கூறல்” என்னும் அதிகாரத்தில், கடுமை யில்லாத-இனிய சொற்களையே பேசவேண்டும் என்று முன்னர் வள்ளுவர் அறிவித்துள்ளாரல்லவா? அந்த இனிமை (நயன்) இல்லாத சொற்களைச் சான்றோர் தவறிப் பேசினாலும் பேசலாம், பயனில்லாத சொற்களை மட்டும் பேசவே கூடாது என்று இங்கே கூறுகிறார்.

‘நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று’

சான்றோர் பிறரிடம் குற்றம் கண்டவழி அவரிடம்

நயமாகப் பேசியே அவரைத் திருத்தவேண்டும். அந்நயத்