பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. தீவினை யச்சம்

வழிவழியாகத் தீச்செயல் செய்து வரும் வழக்கத் தினர், என்றைக்குமே தீச் செயல்களைச் செய்ய அஞ்சவே மாட்டார்கள். அவ்வழக்கமில்லாத நல்ல குடும்பத்தினர் என்றைக்குமே அஞ்சுவார்கள். திருடன் மகன் திருடுகிறான்; பிச்சைக்காரன் மகன் பிச்சையெடுக்கிறான். சில பெற்றோர் களே தம் பிள்ளைகளையும் இப்படிப் பழக்குகின்றனர். எனவே இவ்விதம் பரம்பரைப் பழக்கம் உடையவர்கள். செய்யக்கூடாத அச்செயல்களைச் சிறிதும் தாழ்ந்தன வாகக் கருதாமல் மிக எளிதில் செய்கின்றார்கள். ஆயின் நல்லோர் மரபில் தோன்றிய நல்லோர்கள் இன்னவற்றைச் செய்யமாட்டார்கள்; செய்யும்படியான நெருக்கடி நேரிட் டாலும் செய்ய அஞ்சுவார்கள்; பின்வாங்குவார்கள்.

“தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்

தீவினை யென்னுஞ் செருக்கு’.

ஈண்டு பரம்பரைப் பழக்கத்தைப் புகுத்தாமல், தனி மனிதனே தான் பலகாலும் தீவினை செய்து பழகியவனா யிருந்தால் அஞ்சமாட்டான், பழகாதவனாயிருந்தால் அஞ்சு வான் என்றே பொருள் கூறிவிடலாமாயினும், திருடன் திருடுவான் திருடாதவன் திருடமாட்டான் என்பது போல இச்செய்தி எல்லோர்க்கும் தெரிந்ததுதான் ஆதலால் இதில் ஒன்றும் சிறப்பில்லை; வள்ளுவர் புதிதாக ஏதேனும் ஒரு கருத்துக் கூறியிருப்பார்; அதுதான் பரம்பரைப் பழக்கம்