பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 18]

இதுகாறும் ஆராய்ந்து வந்தோமன்றோ? அதனாலென்க.

எனவே, தீவினை செய்யாதவன் எவனோ அவனே கேடில்லாதவன் என்பது புலனாகும். ஆகவே தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்னும் புறநானூற்று அடிக் கொப்ப, ஒருவன் கேடின்றி வாழ்கின்றானென்றால் அவன் தீவினை செய்யாதவன் என்றும், ஒருவன் கேடுற்று வீழ்கிறான் என்றால் அவன் தீவினை செய்தவன் என்றும் அளந்து முடிவு கட்டுகின்றார் ஆசிரியர்.

‘தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றுக்

துன்னற்க தீவினைப் பால்’’. ‘அருங்கேட னென்ப தறிக மருங்கோடித்

தீவினை செய்யா னெனின்’.