பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. ஒப்புர வறிதல்

ஒப்புரவு அறிதல் என்றால், தம்மால் இயன்ற வரைக்கும் உலகிற்கு உதவி, உலகோடு ஒத்து வாழ்தலை அறிந்திருத்தல் - என்பது பொருள். அடுத்த பகுதியில் சொல்லப்படும் ஈகைக்கும் இந்த ஒப்புரவுக்கும் வேற்றுமை பெரிதில்லையாயினும் சிறிதுண்டு. ஈகை என்பது தம்மிடம் வந்து கேட்போருக்கு, இருப்பதை இல்லையென்னாது ஈதல் (கொடுத்தல்). ஒப்புரவு என்பது எவ்வெந் நேரத்தில் யார்யார்க்கு என்னென்ன குறைகள் உண்டு என்பதை, அவர் சொல்லியோ, அல்லது தாமாகவோ உணர்ந்து, அவற்றைப் போக்க முற்படுதல், அவருடைய தேவைகளைத் தம்மாலியன்றவரையும் நிறைவித்தல் முதலிய பரந்த பான்மை கொண்ட பண்பு. இன்னும் விளங்கச் சொல்ல வேண்டுமானால், கேட்டார்க்கு மட்டும் கொடுப்பது ஈகை எனவும் - கேளாதவர்க்கும் குறிப்பறிந்து கொடுப்பது ஒப்புரவு எனவும், கேட்டவர்க்குத் தாமாகத் தாம் விரும்பியதைக் கொடுப்பது ஈகையெனவும் - வேண்டிய வர்கள் அவர்களாகவே அவர்கட்கு வேண்டிய அளவு எடுத்துக் கொள்ளும்படி விடுவது ஒப்புரவு எனவும்: பொருள் மட்டும் கொடுப்பது ஈகை யெனவும் - உடல், பொருள், உயிர், உழைப்பு எல்லாம் கொடுப்பது ஒப்புரவு எனவும்; கொடுப்பதோடு நின்று விடுவது ஈகையெனவும் - கொடுத்த பின்னும் நெடுகிலும் மனமொத்துக் கலந்து