பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வள்ளுவர் இல்லம்

உலகிற்கு உதவிக் கொண்டேயிருந்தால் குடும்பம் உருப்படுமா? என்ற ஐயம் இங்கே எழலாம். அதனைத் திருவள்ளுவர் பின்வருமாறு தெளிவுறுத்துகின்றார்:

உலகிற்கு உதவுபவன் ஒருபோதும் கெடமாட்டான். கெட்ட வழியில் பணம் தேடினும், தான் மட்டுமே உண்ணினும் உலகம் பழிக்கும் என்று அஞ்சி, நல்ல வழியில் தேடி, அதனைப் பலர்க்கும் பகுத்துக் கொடுத்து உண்பவனுடைய வாழ்க்கை தொடர்ந்து நல்லவிதமாகவே நடக்கும்-என்பது ஆசிரியர் கருத்து.

“பழியஞ்சிப் பாத்துண் உடைத்தாயின் வாழ்க்கை

வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்’

கெட்டவழியில் பொருள்தேடாவிட்டால் பலர்க்கும் பகுத்துக் கொடுக்கும் அளவு பொருள் சேர்வது எப்படி? நல்லவழியில் பொருள் தேடும் நல்லோர் சிலர் தம்மையே நன்கு பாதுகாத்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றார்களே! அவர்கள் பலர்க்கும் பகுத்துக் கொடுப்பது எப்படி செல்வம் சேர்ந்திருந்தாலும், பலர்க்கும் பகுத்துக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அக்குடும்பம் விரைவில் நொடித்து விடாதா? பின்பு இடையறாமல் எப்பொழுதும் விளங்குவது எப்படி? என்பவற்றையெல்லாம் எண்ணும்போது இக் கருத்தில் சிலர்க்கு நம்பிக்கை தோன்றாதுதானே! இதனைச் சிறிது ஆராய்வோம்:

திருவள்ளுவர் இந்தக் குறளில் தெரிவித்திருப்பது என்ன? நல்ல வழியில் பொருள் ஈட்ட வேண்டும்; அப் பொருளை (பெற்றோர், மனைவி, மக்கள், துறந்தார்,