பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 9

இ.தென்ன! ஒன்றையே இலக்கணமாகவும் பலனா கவும் கூறித் தியங்கச் செய்துள்ளாரே திருவள்ளுவர் என்று திகைக்கலாம் சிலர். இத்தியக்கத்தாலேயே பிறர் வேறுவிதமாக உரை பகர்வாராயினர். கூர்ந்து நோக்கின் இங்குத் திகைப்பிற்கே இடம் இல்லை. எடுத்துக்காட்டு ஒன்று வருக:

பிள்ளையின் இலக்கணம் பெற்றோரைக் காப்பாற்று தலும், உலகிற்குத் தொண்டு செய்தலும் ஆகும் என்று ஒருவர் கூறுவதாக வைத்துக் கொள்வோம். அவ்விரண்டுந் தானே பிள்ளையினால் உண்டாகும் பயனுங்கூட? எனவே, ஒன்றையே இலக்கணமாகவும், பயனாகவும் திருவள்ளுவர் குறிப்பிட்டிருப்பதைக் குறித்துத் தியங்க வேண்டாவன்றோ?

‘ஒருவன் இல்வாழ்க்கை, தன் துணைவி மேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்துண்டலாகிய அறத்தினையும் உடைத்தாயின் அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆம். இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகவழி இல்லறம் கடைபோகாமையின் அன்புடைமை பண்பாயிற்று, அறனுடைமை பயனாயிற்று” என்பது பரிமேலழகர் உரை.

அன்பு என்பதற்கு மனைவி மேல் உள்ள அன்பு என்று பகர்ந்துள்ளார் பரிமேலழகர். இங்கே வள்ளுவர் காதல் என்னும் சொல்லை வைத்திருந்தாலும் பரிமேலழகர் பகரலாம் அவ்விதம். இல்லையே! ஆகவே, அன்பு என்பதற்கு யாவரிடத்தும் உள்ள அன்பு என்று பொருள் கூறினால், அவ்வில்வாழ்வானுக்கும் பெருமை, திருவள்ளு