பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வள்ளுவர் இல்லம்

குடும்பம் தொடர்ந்து விளக்கம் பெறும் என்னும் இக்குறட் கருத்து இப்போது ஏற்புடையதாய்த் தோன்றுமே!

சிலர் இன்னொருவருடைய பொருளை எடுத்துத் தம்முடையதுபோல் வழங்குவார்கள். “கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையார்க்கு உடைப்பது” என்றால் இதுதான்! இன்னும் சிலர், பிறரை வருத்திப் படாதபாடு படுத்தி அவரிடம் உள்ள பொருளைப் பறித்து, நல்லவர் போலத் தாங்கள் வழங்குவார்கள். “மாட்டைக் கொன்று செருப்புத் தானம் செய்வது’ என்றால் இதுவே தான்! இவ்விதம் பழிப்புக்கிடமான முறையில் பொருள் தேடிச் செய்பவையெல்லாம் உண்மையான உதவியாகா. இது குறித்தே, “பழியஞ்சிப் பாத்தூண்” என்றார் ஆசிரியர்.

இல்வாழ்க்கைக்கு இருக்க வேண்டிய இலக்கணம் அன்பும் அறமும் உடைமையே. இல்வாழ்க்கையின் பயனும் அந்த அன்பும் அறமும் உடைத்தாய் இருப்பதே. அன்பும் அறமும் இல்லாதவன் இனிமையாக இல்வாழ்க்கையை எப்படி நடத்த முடியும் முடியாது. அதனாலேயே அவ் விரண்டும் உடைமை இல்வாழ்க்கையின் இலக்கணமாம். யாவரிடமும் அன்பு காட்டுவதும் அறம் செய்வதுமே இல்வாழ்க்கையின் நோக்கம். ஆதலால், அவ்விரண்டும் உடைமை இல்வாழ்க்கையின் பலனும் ஆகும்.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது”