பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 29

கோட்டையும் தாண்டிவிட்டது. இதற்குமேல் இன்னும் எந்தெந்தச் சொற்களால் குடும்பக் கலையின் உயர் நிலையை உரைத்துக் காட்ட முடியும்!

வீட்டில் ஒன்றும் இல்லாவிடினும் மனைவிக்கு மாண்பு மட்டும் இருந்துவிட்டால், மனைக்கு வேண்டிய மற்ற எல்லாம் இருப்பதாகவே பொருளாம். வீட்டில் எல்லாமே இருந்தாலும் மனைவிக்கு மாண்பு இல்லையானால் ஒன்றும் இல்லாததாகவே பொருளாம். இதனை இல்லது என்! உள்ளது என்? என்னும் வினாக்களால் விளங்க வைத்துள்ளார் ஆசிரியர். இங்கே வள்ளுவர், திட்டவட்ட மாகத் தெளிவான ஒரு முடிவுக்குத் துணிந்து வந்துவிட்ட வராகக் காணப்படுகிறார். வேறு எது இருந்தாலும் இல்லா விட்டாலும், குடும்பத்துக்கு உண்மையான மூலதனம் (Capital) மனைவியே-அதுவும் மாண்புமிக்க மனைவியே என்பது வள்ளுவர் கருத்து.

இனி இக்குறட் கருத்தை இன்னும் சிறிது விளங்க நோக்குவோம்:-வீட்டில் போதிய பொருள்கள் இல்லா விடினும் போதிய திறமையும் ஊக்கமும் உடைய மனைவி, எல்லாம் இருக்கும் வீட்டை விடத் தன் குடும்பத்தைச் சீர் திகழச் செய்வாள்; திறமையும் ஆர்வமும் இல்லாதவளோ, எல்லாம் இருப்பினும், ஒன்றும் இல்லாத வீட்டைவிடத் தன் குடும்பத்தைப் பாழ்படுத்துவாள். முன்னவள் செட்டாகப் புதிய பொருள்களைச் சேகரிப்பாள் - நீண்ட நாள் வைத்துப் படைப்பாள். பின்னவளோ, புதிய பொருள்களைச் சேகரிப்பதுஞ் செய்யாமல், உள்ள பொருள்களையும் விரைவில் அழித்து ஒன்றும் இலையாக்குவாள். முன்னவள்