பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1W களில் பல தற் புதுமைகள் வெளிப்பட்டன. எடுத்துக் காட்டாக, ‘கோளில் பொறியில் குணமிலவே எண் குணத்தான், தாளை வணங்காத் தலை,” என்னும் குறளில் உள்ள எண் குணத்தான் என்பதற்கு எட்டு வகையான குணங்களையுடையவன் இறைவன் என்பார் பரிமேலழகர். இவ்வுரையினை மறுத்து ஆசிரியர், ஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டா மையிலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமையில்லாதான், அறவாழி அந்தணன் என்ற எட்டு வகையான குணங்களையுடையவன் என வள்ளுவர் காட்டிய கடவுளுக்கு அவர் குறட்பாக்களுள் கூறிய எண் பெயர்களையே புதிய உரையாகப் புதுமை உரையாகக் கூறியமைக்குப் பாவேந்தர் பாரதிதாசனார் முதல் தமிழக, அறிஞர்கள் வரை அவரைப் பொன் போல் போற்றி உரைத்தனர்.

ஆசிரியரின் திருக்குறள் விளக்க வெளியீடுகள் பல நம் பதிப்பகத்தின் வாயிலாக முன்னரே வெளிவந்துள்ளன. ஆசிரியரின் புதுமை காணும் ஆராய்ச்சிக் கருத்துரை களுக்குத் தமிழ் மக்களிடமிருந்து எத்துணைப் பாராட்டும் - மதிப்பும் - வரவேற்பும் கிடைத்துள்ளன என்பதை அறிவிக்கு முகத்தான், மக்கள் மதிப்புரை என்னும் பகுதி நூலின் இறுதியில் அமைக்கப் பெற்றுள்ளது. இந்நூலுக்கான அழகான மேலட்டையைத் தன் பொருட் செலவில் அச்சிட்டுத் தந்த புதுச்சேரி பிரெஞ்சுப் பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்கட்கும், நூலினை வெளியிடுவதில் ஆலோசனைகள் வழங்கிய கடலூர் புலவர் வ. ஞானப் பிரகாசம் அவர்கட்கும், நூலினை அழகுற அச்சிட்டுத் தந்த சிதம்பரம் சுபம் அச்சகத்தாருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

இவ்வெளியீட்டுக்கு மக்கள் ஆதரவோடு, பாடநூற் குழுவினர் ஆதரவும் நூல் நிலையக் குழுவினர் ஆதரவும் கிடைக்கின் மேலும் பல நல்ல பய்னுள்ள இலக்கிய வெளியீடுகளைப் படைக்க இயலும்.

குமரேச திருநீலகண்டன் புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம்